அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சித்த மருத்துவ பாடல்

saravanan
0

"அருந்தமிழ் மருத்துவம் 500" என்ற பாடல் பிரதாபசிம்மன் என்பவரால் இயற்றப்பட்டு தமிழாராய்ச்சி நிறுவனத்தால் 2018-இல் பதிப்பிக்கப்பட்டது.


காய்ச்சலுக்கு நிலவேம்பு

விக்கலுக்கு மயிலிறகு

வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்

நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்

வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ

வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை

சீழ்காதுக்கு நிலவேம்பு

நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்

நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்

குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்

பெரும்பாட்டிற்கு அத்திநாவல்

பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்

கழிச்சலுக்கு தயிர்சுண்டை

அக்கிக்கு வெண்பூசனை

ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி

விதைநோயா கழற்சிவிதை

புண்படைக்கு புங்கன்சீமையகத்தி

புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்

கரும்படை வெட்பாலைசிரட்டை

கால்சொறிக்குவெங்காரபனிநீர்

கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு

உளம்மயக்க கஞ்சாகள்ளு

உடல்இளைக்க தேன்கொள்ளு

உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்

அன்றாடம்சிறுபிணிக்கு

அருமருந்தாய் வழங்கியதை

அறிந்தவரை உரைத்தேனே!


Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)