இராவணன் எழுதிய நூல்கள்

saran
6

இமாலயத்தையே அசைத்த மாபெரும் வீரனும், சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்தவனுமான சிறந்த சிவ பக்தன் இராவணன்.


இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே

திருநீற்றுப் பதிகத்தில் இராவணனை சேர்த்து திருநீற்றின் பெருமையை பாடியுள்ளார் திருஞானசம்பந்தர்.

இலங்கையை தன் பராக்ரமத்தொடு நல்லாட்சி புரிந்து ஆண்ட அரசன், புராணங்களில் கொடிய அரக்கனாக சொல்லப்பட்ட தமிழன். இசை, இலக்கியம், மருத்துவம் மற்றும் சிறந்த அறிவியல் ஞானமும் கொண்டவன் என்பதற்கு ஒரு உதாரணம் புஷ்பக விமானம். மருத்துவத்திலும் சிறந்தவன் என்பதற்கு இராவணன் எழுதிய இந்த நூல்களே சாட்சி...

1.    உடற்கூறு நூல்
2.    மலை வாகடம்
3.    மாதர் மருத்துவம்
4.    இராவணன் – 12000
5.    நாடி, எண்வகை பரிசோதனை நூல்
6.    இராவணன் வைத்திய சிந்தாமணி
7.    இராவணன் மருந்துகள் - 12000
8.    இராவணன் நோய் நிதானம் - 72 000
9.    இராவணன் கியாழங்க – 7000
10. இராவணன் வாலை வாகடம் – 40000
11. இராவணன் வர்ம ஆதி நூல்
12. வர்ம திறவுகோல் நூல்கள்
13. யாழ்பாணம் மூலிகை அகராதி
14. யாழ்பாணன் பொது அகராதி
15. பெரிய மாட்டு வாகடம்
16. நச்சு மருத்துவம்
17. அகால மரண நூல்
18. உடல் தொழில் நூல்
19. தத்துவ விளக்க நூல்
20. இராவணன் பொது மருத்துவம்
21. இராவணன் சுகாதார மருத்துவம்
22. இராவணன் திராவக தீநீர் நூல் அர்க்க பிரகாசம்
23. இராவணன் அறுவை மருத்துவம் – 6000
24. இராவணன் பொருட்பண்பு நூல்
25. பாண்ட புதையல் முறைகள் – 600
26. இராவணன் வில்லை வாகடம்
27. இராவணன் மெழுகு வாகடம்


இவற்றில் சில நூல்கள் ஹிந்தி, தெலுங்கு, போன்ற மொழியில் மாற்றப்பட்டு இருகின்றது. ஏனைய நூல்கள் தமிழிலேயே கரு மாறாமல் இலங்கை, வங்காளம், கேரளம் ஆகிய இடங்களில் மக்களுக்கு பயன்படாமல் இருப்பது தெரியவருகிறது.
Tags

கருத்துரையிடுக

6கருத்துகள்
கருத்துரையிடுக