திருநாகேஸ்வரம்

saran
0

தலத்தின் பெயர்: திருநாகேஸ்வரம் – நவகிரகத் தலம் (Thirunageswaram)
சுவாமியின் திருநாமம்: ஸ்ரீ நாகநாதசுவாமி, இராகு, (Naganatha swamy, Raagu)
தல விருட்சம்: செண்பகம்
தீர்த்தம்: சூரிய தீர்த்தம்
அமைவிடம்: திருநாகேஸ்வரம், தஞ்சாவூர்.

செல்லும் வழி: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 6 கி.மீ. தூரத்தில் திருநாகேஸ்வரம் அமைந்துள்ளது.

தரிசன நேரம்: காலை 6.00 முதல் பகல் 12.45 வரை, மாலை 4.00 முதல் இரவு 8.30 வரை.

தல வரலாறு:
சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்தார் பிருங்கி முனிவர். இதனால் கோபம் கொண்ட பார்வதி சிவனிடம் அர்த்தநாரீஸ்வர வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தாள். பார்வதியின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அவளுக்கு தன் உடலில் பாதி கொடுத்து உமையொருவரானார். அர்த்தநாரீஸ்வர வடிவம் உலகின் பல பகுதிகளில் அமைய வேண்டும் என வேண்டினாள். அதன்படி இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவில் சிவ பார்வதி காட்சியளிக்கின்றனர். மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்மன் பிறையணி வானுதலாள்.

சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மன். ஒருசமயம் அவன் வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தபோது, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு தீண்டியது. இதையறிந்த முனிவர் கோபம் கொண்டார். தன் மகனை தீண்டிய தக்ககன் மானிடனாக பிறக்கும்படி சபித்துவிட்டார். சாபவிமோசனம் பெற, தக்ககன் காசிப முனிவரிடம் ஆலோசனை கேட்டான். "பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்து வழிபட்டால் சாபம் நீங்கும்' என்றார் அவர். அதன்படி பூமிக்கு வந்த தக்ககன், சிவலிங்க பூஜை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். இவரே இத்தலத்தில் அருளுகிறார். நாகமாகிய தக்ககனுக்கு அருளியதால் இவர், "நாகநாதர்' என பெயர் பெற்றார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)