செல்வ வளம் பெருக ஸ்ரீலக்ஷ்மி மந்திரம்
மந்திரம்
‘ஓம் ஸ்ரீம் மகா லக்ஷ்ம்யை ஸ்வாஹா’
பூஜை முறை
ஒரு வளர்பிறை புதன்கிழமை அதிகாலை மஞ்சள் நிற விரிப்பில் வடக்கு முகமாக அமர்ந்து, அகல் விளக்கில் நெய் தீபமிட்டு, குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்கி ஜபத்தை ஆரம்பிக்க வேண்டும். சங்கில் சிறிது தீர்த்தம் விட்டு வைக்க வேண்டும். ஜபம் செய்ய தாமரை மணி மாலை அல்லது துளசி மணி மாலை பயன்படுத்தி 108 முறை மந்திரத்தை தினமும் ஜபம் செய்து வந்தால் நிச்சயம் பொருள் வளம் பெருகும். தினமும் ஜபம் பூர்த்தியானதும் சங்கில் உள்ள தீர்த்தத்தை அருந்திட வேண்டும்.
