
Kubera Mantra
குபேர மந்திரத்தை தினமும் உச்சரிப்பதால், செல்வத்தின் அதிபதியான குபேரரின் அருள் கிடைத்து, பொருளாதார வளம் பெருகுவதாகவும், நிதி நெருக்கடிகள் நீங்குவதாகவும் நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாட்களில் இதைச் சொல்வது மிகவும் சிறந்தது; இது உங்கள் வாழ்க்கையில் செல்வச் செழிப்பையும் நிலையான அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும்.
மந்திரம்
‘ஓம் ஸ்ரீம் யஷாய குபேராய வைஸ்ரவனாய
தன தான்யாதி தயே
தன தான்ய சம்ரித்திம்மே
தேஹி தாபயா ஸ்வாஹா’
பூஜை முறை
அமாவசை மலையில் குளித்து தூய ஆடை அணிந்து அருகில் உள்ள சிவ தலத்திற்கு சென்று வர வேண்டும். அன்று இரவு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். ஸ்ரீ குபேர எந்திரத்தை வீட்டின் பூஜையறையில் செம்பு அல்லது பித்தளை தாம்பாளத்தில் பொட்டிட்டு, மலரிட்டு வைத்துகொள்ள வேண்டும். அட்சதையை கலந்து வைத்து, வாழைபழம் உள்ளிட்ட ஐந்து வகை கனிகளை நிவேதனம் செய்ய வேண்டும்.