ரிபுகீதை - Ribu Geethai

saran
0

ரிபுகீதை என்ற இந்நூல் கைலாயத்தில் பரமசிவனால் ரிபு முனிவருக்கும் பின்னர் ரிபு முனிவரால் கேதாரஸ்தலத்தில் நிதாகர் முதலியோருக்கும் உபதேசிக்கப்பட்டது. ஐம்பது அத்தியாயங்களில் 2493 ஸ்லோகங்களைக் கொண்ட வடமொழி மூலத்தை, உலகநாத ஸ்வாமிகள் என்னும் துறவுநாமம் பூண்ட திருவிடைமருதூர் பிரம்மஸ்ரீ பிக்ஷு சாஸ்திரிகள் தமிழில் 44 அத்தியாயங்களில் 1924 விருத்தப்பாக்களாக ஆக்கியுள்ளார்.

பல அடியார்களுக்கு இந்நூலைப் பாராயணம் செய்யுமாறு உபதேசித்தும், சில பாடல்களைத் தாமே தேர்ந்தெடுத்து பாராயணம் செய்யவும் ஸ்ரீ ரமண மகரிஷி பக்தர்களை ஊக்குவித்திருக்கிறார். சம்பூர்ணம்மாள், தனக்குப் பாடல்களின் பொருள் விளங்கவில்லை என்று சொல்ல, ஸ்ரீ ரமண மகரிஷி 'பொருள் புரியாவிட்டாலும் பாராயணம் செய்வதால் மிகுந்த பலன் உண்டு' என்று பதிலிறுத்தார்.

நான்கு வேதங்கள் சொல்லும் ஆத்மா ஞானம் ஆனது ப்ரக்ஞானம் ப்ரம்ஹா, அஹம் ப்ரம்ஹாஸ்மி, தத்வமஸி, அயம் ஆன்மா பிரம்ஹா ஆகும்.

ரிக் வேத ஐத்ரேய உபநிஷத்திலே இருக்கிறது ப்ரக்ஞானம் ப்ரம்ஹா. ஞான வடிவாக இருப்பதே பிரம்மம் என்பது பொருள். இது மனனம், தியானம், அப்பியாசம் செய்ய தகுந்த வாக்கியமாக சொல்கிறங்க.

யஜுர் வேத ப்ருகதாரண்ய உபநிஷத்திலே இருப்பது அஹம் ப்ரம்ஹாஸ்மி. உள்ளமே பிரம்மமாக இருக்கிறது. இது அனுபூதி அதாவது சமாதி அனுபவ வாக்கியம்.

சாம வேத வாக்கியம் சாந்தோக்கிய உபநிஷத்திலே இருக்கு. அதே இதுவரை பாத்த தத்வமஸி. அது நீயாக இருக்கிறாய். இது உபதேச வாக்கியம்.

அதர்வண மாண்டூக்கிய உபநிஷத்திலே இருக்கிறது அயம் ஆன்மா பிரம்ஹா. இந்த ஆன்மா பிரம்மம். இது நிதித்தியாசன வாக்கியம்.

சுயமதுவாம் தத்வமசி என்னும் வாக்கியம்
சொல்லும் உபதேச மகா வாக்யமாகும்
இயலும் அகம்பிரம்மாஸ்மி என்னும் வாக்யம்
இலகு அநுபூதி மகா வாக்யமாகும்
மயன் மருவாப் பிரஞ்ஞானம் பிரம் வாக்யம்
மனனத்தின் அப்பியாச வாக்யமாகும்
அய்மான்மாப் பிரமமென அறையும் வாக்யம்
அதற்கெல்லாம் சம்மதமாம் வாக்கியந்தானே - ரிபு கீதை

ஜீவனது பேத நாட்டமாகும் சுக துக்கானுபவங்கள் ஒழிய வேண்டுமானால் மும்மூன்றாக உள்ளவைகளும் நாமரூப நாட்டமும் அழியவேண்டும். இந்த நிலை அகண்டாகார விருத்தி (துண்டாடப்படாத செயல்)தத்வத்தினால் தான் அமைய வேண்டும். இந்த அகண்டாகாரவ்ருத்தியே தான் இங்கு ஸாதகனுடைய பூஜையில் அம்ருதமாக ப்ரதம பாகத்தை வகிக்கிறது.

தேகமுதனா னென்னறு வித விர்த்தி - திகழ் நானென்னல் சாக்ஷிவ்ருத்தி
ஏகபரநானென்னல் அகண்ட விர்த்தியாம் மூன்று விருத்திகளிரண்டைத்தள்ளி
ஆகுமகண்டாகார விருத்தி தன்னை அனவரதமாய் ஆதாரவாயப்யஸித்து
சோகமுறும் சித்தவிகற்பங்கள்தீர்த்து சொன்னவகண் டேகரஸ சொரூபமாய் - ரிபு கீதை.

இந்த அம்ருதத்தின் வடிவம் ஞானகாண்டத்தில் இவ்வாறு கூறப்படுகிறது, - நான் ஜீவன் என்ற மயக்க அறிவு நீங்கி நான் ஸத்-சித்-ஆனந்தமான பரசித் உன்ற உண்மையறிவும், இதுஉலகம் என்னும் மயக்க அறிவு நீங்கி இதுவே சத் -சித்-ஆனந்தமான சிவம் என்ற உண்மை அறிவுமே.

திடஞானி தரிசனமே தீர்த்த மாடல்
திடஞானி தரிசனமே தேவபூஜை
திடஞானி தரிசனமே செப தபங்கள்
திடஞானி தரிசனமே செய்யும் அறங்கள். -ரிபு கீதை

பலவிதமாம் பூதம் பொய் புவனம் பொய்யே
யுரைதருபா வாபாவ மியாவும் பொய்யே
யுற்பத்தி திதிநாச மனைத்தும் பொய்யே
விரிவுபெறு போகம்பொய் பந்தம் பொய்யே
விடயமுத லியாவும் பொய் விதியும் பொய்யே
சுருதியோடு நூலும்பொய் சொல்லும் பொய்யே
சுககனமாம் பரபிரம மொன்றே மெய்யாம்
தகுகுரவன் சீடன்பொய் குணதோடம் பொய்
பரவியிடு முலகும் பொய் யுயிர்களும் பொய்
பந்தமொடு மோட்சசுக துக்கம் பொய்யே
சுத்தமதா மனதும் பொய் வாக்கும் பொய்யே

எனக்கயலாய்த் தூலமுதற் றேகமில்லை
எனக்கயலாய் நனவுமுதலவத்தை இல்லை
எனக்கயலாய் விசுவன்முத லாருமில்லை
எனக்கயலா யாந்தரமாஞ் சகத்துமில்லை
எனக்கயலா எவையுமில்லை பிரம மேநா
னென்று உரமா இருந்திடுவோன் சீவன் முக்தன்

எனக்கயலாய் தீர்த்தமில்லை தானமில்லை
எனக்கயலாய் தலங்கலில்லை தெய்வமில்லை
எனக்கயலாய் தெய்வத்தின் சேவையில்லை
எனக்கயலாய் தருமமில்லை பாவமில்லை
எனக்க்யலாய் ஞானமில்லை மோட்சமில்லை
எனக்கயலாய் வேதமில்லை நூலுமில்லை
எனக்கயலாய் விதியுமில்லை நிதேதமில்லை
எனக்கயலாய் பூதமில்லை புவனமில்லை
எனக்கயலா ஒருமையில்லை இருமை இல்லை
எனக்கயலா உயர்வுமில்லை தாழ்வுமில்லை
எனக்கயலா புகழ்வுமில்லை இகழ்வுமில்லை
யான்பிரம மென்ருனர்வோன் சீவன் முக்தன்
-----ரிபு கீதையிலிருந்து

கறையற்ற பரப்பிரமம் ஒன்றே உண்மை
காண்பதுவுங் கேட்பதுவும் எவையு மில்லை
நிறைவுற்ற பரப்பிரமம் ஒன்றே உண்மை
நினைப்பதுவும் நினையாதும் எவையு மில்லை
மறைவற்ற பரப்பிரமம் ஒன்றே உண்மை
மற்றவெலாம் ஒருகாலும் இலவே இல்லை
குறைவற்ற அப்பிரமம் நானே என்று
கோதறவே எப்போதும் தியானஞ் செய்வாய்
… ரிபுகீதை

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)