திங்களூர் கயிலைநாதர்

saran
0

தலத்தின் பெயர்: திங்களூர் – நவகிரகத் தலம் (Thingaloor)
சுவாமியின் திருநாமம்: கயிலைநாதர், சந்திரன் (kailasanathar, chanthiran)
தல விருட்சம்: வில்வமரம்
வச்திரம்: வெள்ளைத்துணி
தான்யம்: நெல்
உணவு: தயிர் சாதம்
மலர்: வெள்ளை அரளி
அமைவிடம்: திங்களூர், திருப்பழனம், தஞ்சாவூர்.
செல்லும் வழி: தஞ்சை அருகில் இருக்கும் திருவையாறு வழியாக கிழக்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் இவ் ஆலயம் அமைந்துள்ளது.
தரிசன நேரம்: காலை 7.00 முதல் இரவு 8.00 வரை.

தல வரலாறு:
திங்களூரில் அப்பூதி அடிகள் என்ற சிவனடியார் வாழ்ந்து வந்தார். இவர் திருநாவுக்கரசரிடம் கொண்டிருந்த அன்பின் மிகுதியால், அவர் பெயரில் பல நற்பணிகளைச் செய்து வந்தார். ஒருமுறை திங்களூருக்கு எழுந்தருளிய திருநாவுக்கரசர், அப்பூதி அடிகளின் இல்லத்துக்கு வருகை புரிந்தார். திருநாவுக்கரசர் தமது இல்லத்தில் உணவருந்த வேண்டும் என்ற அப்பூதி அடிகளின் வேண்டுகோளை திருநாவுக்கரசர் ஏற்றுக் கொண்டார்.அதற்காக தோட்டத்தில் சென்று வாழை இலை பறித்து வருமாறு அப்பூதி அடிகள் சிறுவனான தமது மகனை அனுப்பி வைத்தார்.ஆனால் வாழைத்தோப்பில் பாம்பு கடித்து சிறுவன் இறந்து விட்டான். தமது துயரத்தை திருநாவுக்கரசரிடம் காட்ட விரும்பாத அப்பூதி, பிணத்தை துணியைல் மூடி வைத்துவிட்டு திருநாவுக்கரசருக்கு உணவு பரிமாறினார்.ஆனால் நிலைமையை உணர்ந்துகொண்ட திருநாவுக்கரசர் சிறுவனின் பிணத்தை கோவிலுக்கு எடுத்துச் சென்று இறைவன் முன் கிடத்தி இறைவனை மனமுருகப் பாடினார். சிறுவன் உயிர் பெற்று எழுந்தான்.

தோஷங்கள் நீங்க:
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இத் தலத்துக்கு வந்து வழிபட்டால் தோஷம் நீங்கும்.

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)