சோதிடம் என்றால் என்ன?

saran
0

சோதிடம் என்றால் என்ன? எப்படி ஒருவரது ஜாதகம் அமைக்கப்படுகிறது. சோதி என்றால் ஒளி, ஒளியின் பாதிப்பால் ஒவொருவருக்கும் உண்டாகும் வாழ்க்கை போக்கை அறிவதே சோதிடம். நவகிரகங்களின் அமைப்பு மற்றும் 27 நட்சதிரங்களின் திசையையும் வைத்து ஒருவரது ஜாதகம் அமைக்கப்படுகிறது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு (வியாழன்), சுக்கிரன் (வெள்ளி), சனி, ராகு, கேது ஆகியவை ஜாதகத்தில் நவகிரகங்களாக செயல்படுகிறது.வானத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் இருந்தாலும் பூமி சுற்றி வரும் குறிப்பிட்ட ஒளிபதையில் உள்ள 27 நட்சதிரங்களும் ஜாதகத்தில் அமைகின்றன. அவை அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருக சீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகியன.

நவகிரகங்களோடு பொருந்தும் எண்கள் ஒன்பது, இதனை வைத்து பிறந்த தேதி பலன்களை இனி வரும் பக்கங்களில் காண்போம்.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)