
Maha Mrityunjeya Matram
மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் சிவபெருமானின் அருள் பெற, நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் தரக்கூடிய மிக சக்தி வாய்ந்த மந்திரமாகும். இது 'உயிர் காக்கும் மந்திரம்' என்றும் போற்றப்படுகிறது, மேலும் இது மரண பயத்தைப் போக்கவல்லது.
மந்த்ரம்:
ஓம் த்ரியம்பகம் யஜா மஹே,
சுகந்திம் புஷ்டி வர்தனம்;
உருவாருகமிவ பந்தனான்,
ம்ரித்யோர் மோக்ஷியே மா அம்ருதாத்.
பொருள் :
மூன்று கண்களை உடைய, சுகந்தமான நறுமணத்தை உடைய, நம் எல்லோருக்கும் உணவு அளிப்பவரும், நம்மை வளர்ச்சி அடைய செய்பவருமான சிவ பெருமானை போற்றி வணங்குகிறோம். விளா பழம் எப்படி தன் காம்பில் இருந்து பிரிந்து விழுகிறதோ, அதே போல நம்மை பந்தங்களில் இருந்து விடுவித்து, மரணம் என்னும் பயத்தில் இருந்து விடுவித்து, அழியாத நிலை அதாவது மோக்ஷ நிலை அடைய செய்வாயாக. என்றும் அழியாதவனே ஈஸ்வரா.