
எட்டாம் எண் சனி ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் (8, 17, 26)
8 – விசித்திரமாக சிந்திக்கக்கூடிய நல்ல அறிவாளிகள். சாத்திரம், கலை, தொழிலறிவு மிக்கவர். பல நல்ல காரியங்களை சாதிக்க முயலுவர், வாழ்கையில் தடைகளும், விபத்தும் ஏற்படும். மனம் நேர்மையாகவே நடக்கும். பொதுசேவையிலும், அரசியலிலும் ஈடுபாடு இருக்கும். உடலுழைப்பில் சிறந்தவர்கள், நீண்ட ஆயுளும் உள்ளவர். சாதாரண நிலையில் இருந்து படிப்படியாக முன்னுக்கு வருபவர் சிலரே. எண்ணெய், எரிவாயு தொடர்பான தொழில் சிறப்பை தரும்.
இவர்களுடைய வினோதமான மூளை அமைப்பால் அதிக நண்பர்கள் இருக்கமாட்டார்கள். வாக்கை காப்பாற்ற எதையும் இழக்கத் தயாராக இருப்பர். தாமதமாகவே திருமணம் நடைபெறும். சிறுவயதில் காதலுண்டு, சாதி, மதம் பாராமல் காதலிப்பவர் உண்டு. நிம்மதியாக வாழ நினைப்பர்.
17 – பொருளைச் சேர்ப்பதில் திறமையுள்ளவர், பெருஞ்செலவாளிகள். திருமண வாழ்வில் சங்கடம் உண்டு. பிறர் பசியாற்றுவர், நல்ல உழைப்பாளி. ஓயாமல் அலைந்து திரிந்து உழைக்கிறவர். நினைத்ததை எப்படியும் சாதித்து விடுவர். சிரமங்களை தாண்டி 35 வயதுக்கு மேல் ஓரளவு வசதி வாய்பை பெறுவர். சர்வாதிகாரி போல் நடப்பர். ரகசியத்தை காப்பதில் வல்லவர். மானத்தை பெரிதென நினைப்பர். சக்கரை நோயாளி.
26 – திறமையும், சுறுசுறுப்பும் இருந்தாலும் துரதிஷ்டம் கொண்டவர். எந்த வேலையிலும் நிரந்தரமாக இருக்கமாட்டார். மனைவி பிரிந்து போய்விடுவர். குடி பழக்கம் இருந்தால் குடல் வியாதியும், அறுவை சிகிச்சை ஏற்படும். அதிக கோபம் உள்ளவர். அடிக்கடி இரத்த காயம் ஏற்படும். சிறுவயதில் உயிர் போகும் அளவிற்கு அடிபடும். தோல்வியை ஒப்புக் கொள்ளமாட்டார், வெட்கமே இல்லாதவர். எவ்வளவு சம்பாதித்தாலும் செலவழித்து நோயையும் அடைவர்.