பிரதோஷ காலத்தில் தேவர்கள் ஆலகால விஷத்திற்கு அஞ்சி,
கைலாய மலையை இங்கும் அங்கும் ஓடி,
இறைவனைச் சரணடைந்து நற்கதியைப் பெற்ற வழிமுறைதான் ஸோம ஸூக்த
பிரதக்ஷிணம் என்று கூறப்படுகின்றது.
ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் எப்படி செய்வது:
சிவாலயத்தில் நந்தியம்பெருமானிடமிருந்து புறப்பட்டு, இடப்புறமாகச் சென்று சண்டிகேசுவரரை வணங்கி, அங்கிருந்து வந்த வழியே திரும்பி வந்து, நந்தியம்பெருமானை வணங்கி,
வலப்புறமாகச் சென்று அபிஷேக தீர்த்தம் வழியும் கோமுகி வரை
வந்து,
மீண்டும் வந்த வழியே திரும்பி நந்தியம்பெருமானின் பின் நின்று மூலஸ்தானத்தில் சிவபெருமானை
நோக்கி வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வலம் செய்து வணங்கும் முறை தான் சோம
சூக்த பிரதட்சணம் எனப்படும். இப்படி பிரதோஷ
தினத்தில் சோம சூக்த
பிரதட்சணம் செய்து வணங்கிட நன்மைகள் விளைகின்றன என்கிறார்கள் மெய்யன்பர்கள்.
பிரதோஷத்தின் சிறப்பையும் பயனையும் உரைக்கும் பாடல் ..!
பேரிடர் நீங்குமே பிணி யாதாயினுஞ் சாம்பலாகுமே.
மறை போற்றும் தேவரிட்ட சாபமாயினும் விமோசனம் காணும்.
விவாகமும் விமரிசையாய் நடந்தேறுமே: புவியுறை,
சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே பூதலத்தே நின்ற
சிவனம்பலமெலாம் ஏகித் தொழுத பேறு பெற
ப்ருஹந்நாயகி யுறை
தக்ஷிணமேரு தன்னை கை தொழுதக் கால்
சிவனே தரிசனம் தருவான் பொய்யல்ல.
ஒவ்வொரு நாளும் மாலை 4.30 - 6.00 நேரம் நித்திய பிரதோஷம் எனவும்,
ஒவ்வொரு அமாவசைக்கு முன்னரும்,
பெளர்ணமிக்கு முன்னரும் வரும் திரயோதசி திதி பட்ச பிரதோஷம்
எனவும்,
சனிக் கிழமையில், திரயோதசி சேர்ந்தால் - அது சனி மஹா பிரதோஷம் எனவும்,
திங்கட் கிழமையில், திரயோதசி சேர்ந்தால் - அது ஸோம பிரதோஷம் எனவும்
போற்றப்பட்டு, சிறப்பான
வகையில் வழிபாடு செய்யப்படும்.