திருமூலர் மாணாக்கர்களுக்கு தம் வரலாறு கூறும் பாடல் - திருமந்திரம்
பாயிரத்தில் இருந்து.
நந்தி இணையடி
நான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே
புகப்பெய்து போற்றிசெய்து
அந்தி மதிபுனை
அரனடி நாள்தொறுஞ்
சிந்தைசெய்
தாகமஞ் செப்பளுற் றேனே. 1
செப்புஞ்
சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும்
அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில்
தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில் எழுகோடி
யுகமிருந் தேனே. 2
இருந்தவக் காரணங்
கேளித் திரனே
பொருந்திய
செல்வப் புவனா பதியாம்
அருந்தவச்
செல்வியைச் சேவித் தடியேன்
பரிந்துடன்
வந்தனன் பத்தியி னாலே. 3
மாலாங்க னேயிங்கு
யான்வந்த காரணம்
நீலாங்க மேனியன்
நேரிழை யாளோடு
மூலாங்க மாக
மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க
வேதத்தைச் செப்பவந் தேனே. 4
நேரிழை யாவாள்
நிரதிச யானந்தப்
பேருடை யாளென்
பிறப்பறுத் தாண்டவள்
சீருடை யாள்சிவ
னாவடு தண்டுறை
சீருடை யாள்பதஞ்
சேர்ந்திருந் தேனே. 5
சேர்ந்திருந்
தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந்
தேன்சிவ னாவடு தண்டுறை
சேர்ந்திருந்
தேன்சிவ போதியின் நிழலிற்
சேர்ந்திருந்
தேன்சிவ நாமங்கள் ஓதியே. 6
அகலிடத்
தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்
தெம்மெய்யைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர
வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள்
நீங்கிநின் றேனே. 7
இருந்தேன்
இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன்
இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன்
இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன்
என்நந்தி இணையடிக் கீழே. 8
ஞானத் தலைவிதன்
நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது
கோடி யுகந்தனுள்
ஞானப்பா லாட்டி
நாதனை அர்ச்சித்து
நானும்
இருந்தேன்நற் போதியின் கீழே. 9
செல்கின்ற வாறறி
கிவமுனி சித்தசன்
வெல்கின்ற
ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர்
அசுரர் நரர்தம்பால்
ஒன்கின்ற வான்வழி
யூடுவந் தேனே. 10
சித்தத்தின்
உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய
வேதத்தின்
ஒத்த உடலையும்
உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கிங்
கருளால் அளித்ததே. 11
நேர்ந்திடு மூல
சரியை நெறியிதென்று
ஆய்ந்திடுங்
காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடுங்
கந்துரு கேண்மின்கள் பூதலத்
தோர்ந்திடுஞ்
சுத்த சைவத் துயிரதே. 12
நான்பெற்ற இன்பம்
பெருகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற
மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற
உணர்வுறு மந்திரந்
தான்பற்றப்
பற்றத் தலைப்படுந் தானே. 13
பிறப்பிலி
நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர்
சென்றுகை கூப்பி
மறப்பிலர்
நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங்
கூடிநின் றேதலு மாமே. 14
சாதாசிவம்
தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந்
தேனின்ற காலம்
இதாசனி யாதிருந்
தேன்மன நீங்கி
உதாசனி யாதுட
நேஉணர்ந் தேமால். 15
அங்கிமி காமைவைத்
தானுடல் வைத்தான்
எங்குமி காமைவைத்
தானுல கேழையும்
தங்கிமி காமைவைத்
தான்தமிழ்ச் சாத்திரம்
பொங்கிமி
காமைவைத் தான்பொருள் தானுமே. 16
பண்டித ராவார்
பதினெட்டுப் பாடையுங்
கண்டவர் கூறுங்
கருத்தறி வார்எங்க
பண்டிதர் தங்கள்
பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான்
அறஞ்சொன்ன வாறே. 17
பின்னைநின் றென்ன
பிறவி பெறுவது
முன்னைநன் றாக
முயல்தவஞ் செய்கிலர்
என்னைநன் றாக
இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத்
தமிழ்செய்யு மாறே. 18
பெற்றமும் மானும்
மழுவும் பிறிவற்ற
தற்பரன் கற்பனை
யாருஞ் சராசரத்
தற்றமும் நல்கி
அடியேன் சிரத்தினில்
நாற்பத மும்அளித்
தான்எங்கள் நந்தியே. 19
ஞேயத்தை ஞானத்தை
ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில்
வரும்பரை
ஆயத்தை யச்சிவன்
தன்னை யகோசர
வீயத்தை முற்றும்
விளக்கியிட் டேனே. 20
விளக்கிப்
பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில்
பெருமையன் ஆனந்தி நந்தி
துளக்கறும்
ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பில் கயிலை
வழியில்வந் தேனே. 21
நந்திஅரு ளாலே
மூலனை நாடிப்பின்
நந்திஅரு ளாலே
சதாசிவ னாயினேன்
நந்திஅரு
ளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்திஅரு ளாலே
நானிருந் தேனே. 22