சனி தோஷம் நீங்க பலன் தரும் எளிய பரிகாரங்கள்

saran
1 minute read
0


ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க அஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரசோதயாத்
  1. தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
  2. சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவழிபடவும்.
  3. கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
  4. வன்னி மர இலைகளை மாலையாக தொடுத்து சிவபெருமானுக்கு, சனிக்கிழமை தோறும் சாத்தி வழிபட்டு வரலாம்.
  5. சனிக்கிழமை அசைவ உணவை தவிர்ப்பது நன்மை தரும்.
  6. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் குளியல் செய்தால் தீமைகள் குறையும்.
  7. ஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாத்தி வழிபடுதல் வேண்டும். அனுமன் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.
  8. ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
  9. தேய்பிறை அஷ்டமி தினத்தில் கால பைரவரை வணங்குவது பலன் தரும்.
  10. அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளை செய்யலாம்.
  11. கோமாதா பூஜை செய்வது நன்மை தரும்.
  12. ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணம் கொடுத்து படிப்பு செலவிற்கு உதவலாம்.
  13. சனி பிரதோஷ வழிபாடு சிறந்த பலன் கொடுக்கும்.
  14. அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.
  15. சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதிகளுக்கு சென்று வழிபட்டு வரலாம்.
  16. மாற்றுத் திறனாளிகளுக்கும், கணவரை இழந்தவர்களுக்கும் உதவிகள் செய்யலாம்.
  17. வன்னி மரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனி பகவானின் முழுமையான பாதிப்புகள் விலகும்.
  18. பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்.
  19. தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால், சனி பகவானின் பிடியில் இருந்து தப்பலாம்.
  20. சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு, காக்கைக்கு உணவு வைக்க சனி பகவான் தோஷத்தில் இருந்து விலகலாம்.

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)