எண் மூன்றில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

saran
0
மூன்றாம் எண் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கான  பலன்கள் (3, 12, 21, 30)


3 – கல்வியும், உயர்ந்த இலட்சியமும், அயராத உழைப்பும், தன்னம்பிக்கையும் உள்ளவர்கள். எழுத்து, அரசியல் ஆர்வமும் அதில் முனேற்றமும் அடைவர். குடும்ப பாசம் இருக்கும். சுயமரியாதையை பெரிதாக நினைப்பர். சுயமான சாதனைகளால் பெரும் புகழ் ஏற்படும். சிலருக்கு சிறு வயதிலேயே தந்தையை இழக்க நேரலாம். பிறர் பொருள் எதையும் விரும்பமாட்டார். உணவு, உறக்கம் பற்றி கவலைப்படமாட்டார்.

ஆண்கள் ஆசிரியர்களாக இருப்பர். நியாயமாக நடந்து பழியின்றி வாழ்வர். கலைகளில் அரவமிருகும். ஆச்சாரமானவரும், பூஜை, யோகம், ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவராக இருப்பர்.

பெண்கள் அடக்கமானவரும், பொருப்பானவருமாக வீட்டை நிர்வகிப்பார்கள். கணவர், குழந்தைகளிடம் நல்ல அன்புடனும், உண்மையாகவும் இருப்பர்.

12 – மிகவும் முரடராக இருக்கும் இவருக்கு பகைவரும் அதிகம் உண்டு. பிரமாதமான மேடை பேச்சுத் திறனும், மக்களை கவரும் வசிய சக்தியும் உண்டு. சிலர் பெரிய நடிகராகலாம். சிறுவயதில் தந்தையை இழந்து பட்டினியாலும் அவதிபடுவர். பிறந்த இடம் விட்டு வேற்றிடம் சென்று வாழ்க்கையில் முன்னேறுவர், வாழ்க்கையில் குறையும் இருக்கும். அறிவாளியாக இருந்தாலும் மூட நம்பிக்கை இருக்கும்.

21 – இராமாயணக் கூனி போன்றவர், தந்திரமானவர். மகிழ்ச்சியானவர்கள் அதலால் இவரது தோல்வியை பிறர் அறிய முடியாது. பிறர் தம்மை அறியாதவாறு தந்திரமாக நடப்பர். வலிமை உள்ளவர்களை தம் பிடிக்குள் வைத்திருப்பர். வாதாடி, பிடிவாதம் செய்து வெற்றியை பெறுவர். சுயநலம் இவர்களை பரந்த மனமற்றவராக செய்துவிடும்.

30 – மிகவும் கெட்டிக்காரர், சிரமமான வேலையிலிருந்து ஒதுங்கி விடுவார். பிறரைச் சமாளிப்பதில் வல்லவர். அவமானம், பசி தாங்க மாட்டார். நகைச்சுவை, கண்காட்சிகளில் விருப்பம் அதிகம், ஆகையால், செலவும் அதிகம் செய்வார். பிறரை சரியாக புரிந்துகொள்வார். உலக சுகத்தை விட முடியாது, ஆதனால் கெட்டவரல்ல.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)