எண் இரண்டில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

saran
0
இரண்டாம் எண் சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கான  பலன்கள் (2, 11, 20, 29)


2 – இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு கற்பனை அதிகம், கூடவே மறதியும் அதிகம். மேலான இலட்சியங்கள் இருக்கும். அச்சமும் இருக்கும். சிறிய துன்பத்தையும் மிக பெரிதாக எண்ணி கலங்குவர், அஞ்சுவர். இரக்கம் அதிகம் இருக்கும். எதையாவது ஆழ்ந்து ஆராய முற்படுவர். அமைதியை விரும்புவர். உடற்பயிற்சி செய்ய மாட்டார், ஆனால் உடம்பை பற்றி மிகக் கவலை படுவார். மனைவி மீது அன்பு இருந்தாலும் அடிக்கடி பிரச்சனை செய்வார், சிலசமயம் அடிக்கவும் செய்வார். எதிர்த்து வாதம் செய்வார், எழுத்து மூலம் பொதுத்தொண்டு செய்வார். பிறர்க்கு அடங்கி வேலை செய்யமாட்டார். இவர்களை பணத்தலோ, அதிகாரத்தாலோ, அடக்கவோ விலைக்கு வாங்கவோ முடியாது. கோபத்தை அடிதடியில் கொண்டுவர மாட்டார். துரோகம் செய்தவரையும் மன்னிப்பார். அநியாயம், அக்கிரமத்தை கண்டால் பொங்கி எழுவார்.

அழகானவர் ஆனால் உடல் பலமிராது. இழப்பு ஏற்பட்டாலும் சகித்து கொண்டு எளிய வாழ்க்கை நடத்துவார். வெளிநாடுகளுக்கு சென்றுவரும் பாக்யவான். தோல்விகளைச் சந்தித்தால் தன்னம்பிக்கை இழந்திடுவார். பலர் பிழைக்க தெரியாதவர் எனப் பெயர் பெறுவர்.

11 – கடவுள் பக்தி மிக்கவர், யுத்த தேவதைகள் மேலேயே பக்தி செய்வார். கவிஞர்களாக விளங்குவர். பல மொழிகளை அறிந்தவரயிருப்பர். அறிவும், சிந்தித்து செயல்படும் திறமையும் உள்ளவர். புகழமையும் அளவிற்கு பொருள் கிட்டாது. மணித நேயம், நிதானம், மேலான எண்ணம், விடாமுயற்சி, கொண்ட இலட்சியத்திலிருந்து விலகாமை, சிரமங்களை பொருட்படுத்தாமை போன்ற சிறப்புகளை பெற்றிருப்பர்.

20 – ஆத்திரமும், வேகமும் உள்ளவர்கள். எண்ணம், பேச்சு, செயல் அனைத்திலும் சுயநலம் தெரியும். புகழுக்காக பொது வேளைகளில் ஈடுபடுவர். வசியப்படுத்தும் அளவிற்கு கவர்ச்சி உடையவர். மிதமிஞ்சிய வளர்ச்சி, கற்பனை இருக்கும். பிடிவாதத்தை கைவிடமாட்டார். அவசர நடவடிக்கையால் பலரை துன்பப்படுத்துவார், இவரால் மற்றவர்கள் நலமடைய சிறப்பான வழிகாட்டியாக முடியும்.

29 – பெண்களுக்கு அழகான கணவர் அமைவர். ஆண்களுக்கு பொறுப்பான மனைவி அமைவர் அனாலும் வீட்டில் அடிக்கடி சண்டையிடுவர். பணபற்றாகுறை வராது. அறிவு அதிகம் அனாலும் ஏமாளி. மண வாழ்க்கை தடுமாறும். வீணாகவே சண்டையிடுவர். மிக கஞ்சர், சுயநலத்தை வெளிகாட்ட மாட்டார். எப்பொருளையும் யாருக்கும் தர மனம் ஒப்பாது. உடல் உழைப்பால் பிறர்க்கு உதவி செய்வார்.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)