ஒன்றாம் எண்ணின் சூரிய ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள். (1, 10, 19, 28)
அவமானத்தை தாங்க மாட்டார். உயிர் போவதனாலும் தன் கட்சி மாற மாட்டார். முதலாக இருக்க, தடையின்றி நடக்க விரும்புவர். பிறருக்கு புத்தி கூறுவர். பிறர் குற்றத்தைப் பெரிதாக பார்ப்பர். பார்க்க சிங்கம் போல இருப்பார். குரலும் கணீரென்று இருக்கும். அலங்காரப் பிரியர், தம்மை விட்டு எவர் பிரிந்தாலும் துணிவாக நிர்ப்பார். தம் தவறுகளுக்குத்தான் ஒரு ஞாயம் வைத்திருப்பார். இவரிடம் நண்பரும், மனைவியும், வேலைக்காரரும் அச்சமும், வருத்தமும் கொண்டேயிருப்பர், பலர் பிரிந்து போய் விடுவர்.
தம் மனைவி மக்கள், தாம் எனக் குடும்பப் பாசத்தை மதிப்பர். அன்புக்காக ஏங்கும் நிலையையும் அடைவர். முகஸ்துதி விரும்புவர். புகழில் போதை கொள்ளுவர். மூக்கு கண்ணாடி அணிவார். பெண்கள் பலருடன் பழகுவார். பழிக்கு ஆளாவர். நோய் கொள்ளுவர். உடல் மெலியும். கண் கோளாறு ஏற்படும். அபார மன உறுதி இருக்கும். கோபம் மித மிஞ்சி இருக்கும்.
10 - பெரும்பாலும் ஒன்றாம் என்னில் கூறப்பட்டவை தொடர்பு உண்டு. திறமையை உள்ளே கொண்டவர். எதிலும் வெற்றி காணுவர். நண்பர்களிடம் பிரியமுள்ளவர். நன்றாக பழகுவார், பிரபலமாகி விடுவார். தற்புகழ்ச்சி பேசுவார். வழுக்கை விழும். வேதனைகளை வெளிகாட்ட மாட்டார். தந்தை பாசம் மிக்கவர். வாழ்கையில் அதிர்ஷ்டம் மாறி மாறி வரும்.
19 - பெரும்பாலும் ஒன்றாம் என்னில் கூறப்பட்டவை தொடர்பு உண்டு. நன்கு படித்திருப்பார். பிடிவாதம் பயங்கரமாக இருக்கும். வெப்ப சரீரம் உள்ளவர். டாக்டர் பட்டம் வாங்குவர். விழுந்தாலும் மீண்டு எழுவர். எதிரிகளை எப்படி சாய்ப்பது என்று நன்கு அறிவர். பெண்ணாக இருந்தாலும் ஆண்களை போல நடப்பர். எதற்கும் கலங்க மாட்டார்.
28 - பெரும்பாலும் ஒன்றாம் என்னில் கூறப்பட்டவை தொடர்பு உண்டு. சூரியனாதிக்கம் குறைவுள்ளவர். பெண்தன்மை உள்ளவர். தகாத செயல்களை செய்வர். தண்டனையும் பெறுவார். நன்கு சம்பதிப்பார். நல்ல நிலையடைவர். உயர் அதிகாரம் உள்ளவர்களை நன்கு அறிந்திருப்பர். பெரும்பாலும் கண்ணாடி அணிய மாட்டார்.