வைத்தீஸ்வரன் கோவில்

saran
0


தலத்தின் பெயர்: வைத்தீஸ்வரன் கோவில் – நவகிரகத் தலம் (Vaitheeswarankovil)
சுவாமியின் திருநாமம்: ஸ்ரீ வைத்தீஸ்வர நாதர், அங்காரகன்(செவ்வாய்), (vaithiyanathar, Angaragan)
தல விருட்சம்: வேம்பு
தீர்த்தம்: சித்தாமிர்தம்
அமைவிடம்: திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்),நாகை.

செல்லும் வழி: மாயவரம்- சீர்காழிக்கும்இடையே 15 கி.மீ. தொலைவில் வைத்தீஸ்வரன்கோவில் அமைந்துள்ளது. மாயவரத்தில் இறங்கி பேருந்து மூலம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செல்லலாம். சீர்காழியிலிருந்து 7 கி.மீ. தொலைவில்உள்ளது.

தரிசன நேரம்: காலை 6.00 முதல் பகல்1.00 வரை, மாலை 4.00 முதல் இரவு9.00 வரை.

தல வரலாறு:
வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார்தையல்நாயகி. அருணகிரிநாதர், குமரகுருபரர், படிக்காசுதம்பிரான், சிதம்பரமுனிவர், காளமேகப்புலவர், ராமலிங்கஅடிகள், வடுகநாததேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள்.

சடாயு என்னும் புள் (பறவை), இருக்கு- வேதம் (ரிக்குவேதம்), முருகவேள், சூரியனாம் ஊர் ஆகிய நால்வரும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கியதால் இத்தல நாயகர் புள்ளிருக்குவேளூர் எனவும் திருபுள்ளிருக்குவேளூர் என தனிச் சிறப்புடனும் அழைக்கப்படுகின்றார்.

அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது. அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. வைத்தீசுவரன்கோயில் சென்று ஒருமண்டலம் சித்தாமிர்தகுளத்தில் குளித்துவிட்டு வைத்தியநாத சுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்றுகேட்டது. இதையடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது. இந்த வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்த போது பார்வதி தைலபாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைலநாயகி என்று பெயர் வந்தது. இங்கு மொத்தம் ஐந்து சந்நிதிகள் உள்ளன.

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)