ஆலங்குடி குரு தட்சிணாமூர்த்தி

saran
0

தலத்தின் பெயர்: ஆலங்குடி– நவகிரகத் தலம்(Alangudi)
சுவாமியின் திருநாமம்: ஆபத்சகாயேஸ்வரர், குரு தட்சிணாமூர்த்தி, (Abathsagayeshwarar, Guru Dhatchinamoorthi)
தல விருட்சம்: பூளைஎன்னும்செடி
தீர்த்தம்: பிரமதீர்த்தம், அமிர்தபுஷ்கரணி
அமைவிடம்: ஆலங்குடி,திருவாரூர்.

செல்லும் வழி: திருவாரூரில் இருந்து மன்னார்குடி செல்லும் ரோட்டில் 30 கி.மீ., தொலைவில் ஆலங்குடி அமைந்துள்ளது.
தரிசன நேரம்: காலை 6.00 முதல் பகல் 12.00 வரை, மாலை 4.00 முதல் இரவு 9.00 வரை.

தல வரலாறு:
தேவர்கள் அமுதம் கடைந்த போது வெள்ளிப்பட்ட விஷத்தினால் அவதியுற்ற போது ஆழமாகிய விஷத்தைக் குடித்துக் காத்தமையால், இத் திருத்தலத்துக்கு ஆலங்குடி என பெயர் வழங்கப்பட்டது.

சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது வெட்டாற்று வெள்ளப்பெருக்கில் ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து கரையேற்றிக் காட்சி தந்தார் என்பது வரலாறு. ஓடம் நிலை தடுமாறிப் பாறையில் மோதிய போது காத்த விநாயகர் கலங்காமல் காத்தபிள்ளையார் என வழங்கப்படுகிறார். சுந்தரர் இத் தலத்தில் முறைப்படி வணங்கி வழிபட்டு குரு தட்சிணாமூர்த்தியை தரிசித்து ஞானோபதேசம் பெற்றார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)