எண் ஐந்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

saran
0
ஐந்தாம் எண் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் (5, 14, 23)


5 – கவர்ச்சியான தோற்றம் உள்ளவர். நிறைய படிக்கும் பழக்கமும், அடக்கம், மரியாதை போன்ற உயர்ந்த பண்புகளும் கொண்டிருப்பார். எவருக்கும் நட்பாகி உண்மையாக இருப்பார், தெய்வபக்தி உண்டு. விளையாட்டு, கணிதம், கணினி போன்ற படிப்பில் ஆர்வமிருக்கும். நாய், பேய், விஷ பூசிகளிடம் அச்சம் இருக்கும். சொந்த தொழிலில் நட்டம் இருப்பதோடு நிர்வாக திறமையோடு எதையும் சமாளிப்பார். மௌனமாக இருக்கும் வரை போற்றபடுவார், பேச தொடங்கினால் தாம் சொன்னதே சரியெனச் சாதிப்பர், இதற்காக பொய்யும் கூறுவார்.

பட்டம் பெற்றவரானால் உயர் பதவி அடைவர். பெண்களால் வாழ்கையில் பல மனத் துன்பம் அடைவர், மனைவி, சகோதரிகள் அதிக செலவு வைப்பார்கள். பிறர் பசி போக்குவார். எவரையும் பிரிந்து வாழ்வார்.

14 – மக்கள் செல்வாக்கு மிக்கவர் அதலால் வியாபாரமும், அரசியலும் இவருக்கு பொருத்தமானவை. மிகுந்த செல்வம் சேர்ப்பர். மரியாதைக்குரிய பதவிகள் தானாகவே தேடி வரும். பொது தொண்டும், பொது வாழ்விலும் ஈடுபடுவர். 14, 23 வயதுகளில் அம்மை, அக்கி போன்றவை தாக்கலாம். வினோதமான செயல்களை செய்து புதுமை படைப்பார், புகழப்படுவர்.

23 – சோம்பலுடையவர், பருமனாக இருப்பார். யோகமும், கருணையும் இவரை மாமனிதராக்கிப் பெரும் புகழளிக்கும். பெரியவர்கள் முதல் அனைவரும் இவரிடம் வசியமாகிடுவர்.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)