ஒன்பதாம் எண் செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் (9, 18, 27)
9 – அரசியலுக்கு ஏற்பவர், அப்பேர்ப்பட்ட மூளையும் கொண்டவர். போராடும் போக்கும், அதற்கேற்ற உடலும் உள்ளவர். எப்படி வாழ்கையை தொடங்கினாலும், போராடி முன்னுக்கு வந்து விடுவர். இடம்விட்டு இடம் போய் பிரபலமாகிடுவர், நுட்பமான அறிவு அதற்கு உதவும். பேசாமலேயே தன் காரியத்தை தானே முடித்துக் கொள்ளும் தந்திரவாதி. தைரியம் மிக்கவர், பார்வையில் சாதுவாக பட்டாலும், பாய்ந்து பலப்பரீட்சையில் இறங்கிடுவர். நாட்டிற்காக, கொள்கைக்காக, வீட்டிற்காக உழைப்பவரும், உயிர்த் தியாகங்கூடச் செய்பவரும் இவரே.
காதலில் விழுவார், காதலித்து மணந்தாலும் கோபம், சந்தேகம், முரட்டுத்தனம், குடும்ப அமைதியைக் கெடுத்து விடும். உற்றாரை பகைத்து எதிர் நீச்சலிட்டு வாழ்வர்.
18 – தாமே பெரியவன் என்றிருப்பவர். தேவையில்லா போராட்டம், கெட்ட பெயர் உண்டாகும், வீண் பழியும் உண்டாகும். பணம், புகழடையும் வழி இவர் கோபத்தை கட்டுபடுத்துவதிலேயே இருக்கிறது. காதலில் தோற்பார். திருமணம் சீக்கிரம் நடந்துவிடும். இவரை கண்டு யாரும் அச்சபடுவர், தீவிரவாதிகளாகவும் இருப்பர். இவர்களை திருத்த முடியாது. பிறரை முட்டாளாக கருதி அலட்சியமாக இருப்பர்.
27 – உயரமானவர்கள். குளிர்ந்த மனம் கொண்டவர். கோபம் எழுந்தால் அசாத்தியமாக வரும், ஆனால் இலேசில் எழாது. போராடும் குணம் நன்மைக்கே பயன்படும். நல்லதே செய்து நலமாடைவர்கள். நல்ல படிப்பும், நுண்ணறிவும் உடையவர்கள். அறுவை சிகிச்சை மருத்துவராக வரலாம், துப்பறியும் அதிகாரியாகவும், வரலாம். கூர்மையான அறிவு, மநோபலம் எதிலும் வெற்றிபெற வைக்கும். வாழ்க்கையில் உயர்வைப் படிப்படியாக அடைந்து விடுவர்.