எண் ஏழில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

saran
0
ஏழாம் எண் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் (7, 16, 25)


7 – அமைதியானவர், சுயநலத்துடன் போட்டி போடாமல் விட்டுக் கொடுத்து நட்பார். நடுநிலையான புத்தியும், நுட்பமான அறிவும் கொண்டவர். மத நம்பிக்கையும், தெய்வ பக்தியும் உள்ளவர். காதலில் ஈடுபட்டு தோல்வியும் காணுவார். வேதாந்த அறிவைச் சம்பாதித்தும் துறவறம் ஏற்க மாட்டார். இவர்கள் சொல்வதை கேட்டால் யாரும் நன்மை பெறலாம். தம் துயரத்தை யாரிடமும் சொல்ல மாட்டார். எதாவது ஒரு குறை, வாழ்க்கை முழுவதும் இவரை வாட்டுவதாக இருக்கும். மநோவலிமை மிக்கவர்.

16 – மிகவும் முன் கோபம் உள்ளவர். நிரந்தரமாக எந்த வேளையிலும் இருக்கமாட்டார். பிறர் வியந்து பாராட்டும்படி எதையும் செய்வார். திரைப்பட நடிகராகவும் இருபார். இவர் கோபத்தையும் பிறர் சகித்துக்கொள்வர். மனைவி, பிள்ளைகளை அடிமையாகவே நடத்துவார், இவரை சாடிஸ்ட் என்றுகூட சொல்லலாம். வெளிநாடு, வெளிமாநிலங்களில் வசிப்பர்.

25 – மன உறுதி சகிப்பு தன்மை அதிகம் கொண்ட அசகாய சூரர். என் மதமே சரியானது என்று தீவிரமாக இருப்பர். பெரும்பாலும் இவர் சுமாரான நடுத்தர வாழ்க்கையே வாழ்வர். மதிப்பும், மானமும் பெரிதென வாழ்வர். எவரையும் வெறுக்க மாட்டார். ஒழுக்கமான இவரை உலகம் அலட்சியப்படுத்தும். இவரது புகழ் கண்டு சிலர் பொறாமைப்பட்டு இவரை அழிக்கவும் முயலுவர்.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)